Saturday, July 25, 2009

அறுபடும் மரணங்கள்...


செருப்புகளைப்
போல
சில நிலைகளைத்
துறந்து மறந்து
வாழ
எஞ்சி நிற்கிறது
நமக்கான
வாழ்வு.....

அறுபடும்
எனத் தெரிந்தும்
நாம்
மறுப்பதில்லை
செருப்புகளை......

அறுபடும்
சாத்தியங்களில்
பழைய செருப்பின்
சௌகரியங்களும்
புதிய செருப்பின்
அசௌகரியங்களும்
இருகிவிடுகிறது
உள்ளுக்குள்........

இருப்பினும்
மற்றொரு
செருப்போடு
பயணப்படுகிறோம்
வாழ்வின்
எதார்த்தத்தோடு.....
- தினேசுவரி, மலேசியா

0 comments:

Post a Comment