Monday, July 27, 2009

கடல் விழுங்கும் ஆறுகள்....

எல்லா அழுக்குகளையும்
திருடிக்கொண்டே வந்த
ஆறுகள் பீற்றிக் கொண்டன
தங்களின் அழகையும்
சுழிவு நெளிவுகளையும்.....

ஓடும் வளைவுகளிள்
பல கோடி மரங்களுக்கு
உயிர் பிச்சைப் போட்டதாகவும்
கதையளந்தன....

உயிரைப் பிணமாக்கும் கலையைக்
கற்றுக் கொண்டதனால்
நாங்கள் படைப்பாளிகள் என
தம்பட்டமும் அடித்தன...

கரைப் புரண்டு வந்ததில்
கடல் கண்ட ஆறுகள்
திக்கற்று நின்றன....
விழுங்கப்பட்ட ஆறுகள்
மிஞ்சியது வெறும்
ஏப்பங்களாக......

- தினேசுவரி

1 comments:

  1. வணக்கம் தோழி தினேசுவரி,
    உங்கள் வலைப்பதிவில் முதல் பின்னூட்டமாக என்னுடையதைப் பதிவு செய்வதில் மகிழ்சி.
    ஆறுகளைப் பற்றிய கவிதைகள் ஏராளம் வந்திருந்தும் உங்களது இந்தக் கவிதை உண்மையிலேயே என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஆறுகளின் புகழ்பாடியே வந்த கவிதைகளுக்கு முரணான இந்தக் கவிதை என்னைத் திரும்பி பார்க்க வைக்கிறது.
    வலைப்பதிவர் உலகத்திற்குள் நுழைந்த உங்களது வரவை பெரிதும் வரவேற்கிறேன். வாழ்த்து!

    வணக்கத்துடன்,
    முனிஸ்வரன்

    ReplyDelete