Thursday, July 30, 2009

இருத்தல்


மழைக்கால
ஒரு பொழுதில் தேநீரோடு
சாளரம் திறந்தேன்...
கண்ணீரோடு
வாழ்க்கை கசந்திருந்தாலும்.....



இளமை



வானவில் வர்ணங்களை
என் பால்யத்தில்
தேடி தேடி
களைத்து விட்டேன்...
அது வெறும்
கருப்புச் சித்திரம்.....



ஏமாற்றம்


விண்மீன்களுக்காக
தவமிருந்து
சேர்த்த இரவுகள்
களவாடப்பட்டது
ஓர் அம்மாவாசை
நாளில்.......

0 comments:

Post a Comment