
எங்கோ
தேங்கி நிற்கும்
மிச்ச வாழ்க்கைக்காக
தேக்கமாகி
போகிறது
மனம்...
ஏற்றம் இறக்கம்
விளையாடும்
குழந்தைப் போல்
இயல்பு
மறந்து
சில வேளைகளில்.....
குத்து குத்து
தாம்பூலத்தில்
முருங்கப்பூவாகிப்
போகும்
அப்பா பெயரும்....
உப்புக் குட்டிகளில்
விசாலமாகிப் போகும்
அப்பாவின் முதுகும்
இன்னும் பரிச்சயம்
உண்டு
இந்த குழந்தை
மனதிற்கு....
பிறந்ததில்
பூப் பூத்த உறவு
பூப் பெய்தலில்
பட்டும்
படாமலும்
தேங்கி நிற்கிறது.....
- தினேசுவரி
தேங்கி நிற்கும்
மிச்ச வாழ்க்கைக்காக
தேக்கமாகி
போகிறது
மனம்...
ஏற்றம் இறக்கம்
விளையாடும்
குழந்தைப் போல்
இயல்பு
மறந்து
சில வேளைகளில்.....
குத்து குத்து
தாம்பூலத்தில்
முருங்கப்பூவாகிப்
போகும்
அப்பா பெயரும்....
உப்புக் குட்டிகளில்
விசாலமாகிப் போகும்
அப்பாவின் முதுகும்
இன்னும் பரிச்சயம்
உண்டு
இந்த குழந்தை
மனதிற்கு....
பிறந்ததில்
பூப் பூத்த உறவு
பூப் பெய்தலில்
பட்டும்
படாமலும்
தேங்கி நிற்கிறது.....
- தினேசுவரி
0 comments:
Post a Comment