
பிள்ளைகளை
வளர்ப்பதாகச்
சொல்லிப்
பூச்சாண்டிகளைச்
சப்தமில்லாமல்
நாம்
வளர்த்து
விடுகிறோம்.......
குழந்தைகளைத்
திணரடிக்க
நம் பூச்சாண்டிகள்
பலவித
பரிணாமங்களிள்....
தலை இல்லாமலும்
கை கால் இல்லாமலும்
கரிச்சட்டியை
விட கருப்போடும் .........
சாத்தியப்பட்டால்
பிள்ளைகளைத்
திணித்துக்கொண்டு
போகும்
சாக்கோடும்
அடையாளங்காணப்படுகின்றன.......
வளர வளர
பிள்ளைகளுக்குப்
பூச்சாண்டிகள்
பழக்கமாகிப்போக
விரக்தியில்
நாமே
பூச்சாண்டிகளாகிறோம்...!
அருமை
ReplyDelete