Sunday, August 30, 2009

முடிவு




மலரைத்
தொட முடியாத
ஏக்கத்தோடு
பல இலைகள்
உதிரலாம்...

பூக்களை
உரசிய இலைகள்
அதுவே
முக்தியெனவும்
பரிகசிக்கலாம்...

மனிதனின்
கடவுள்களிடம்
பூக்களுக்கே
இருப்பிடம் என
இலைகள்
பொறாமைக் கூட
படலாம்...

சருகாகி மண்ணாகிப்
போனப் பிறகு
புத்தி தெளியும்
பூவென்ன.....
இலையென்ன.......

0 comments:

Post a Comment