புத்தக இடுக்கில்
மயில் இறகுகள்
வண்ணங்கள்
நிறைந்த பால்யத்தில்....
வளர்வதாகச்
சொல்லி
கதை வளர்த்து
கொண்டோம்
கதை கதையாய்.....
ஒரு குவளை
தண்ணீர் ஊற்றி
ஒரே பூப் பூத்த
இரகசியத்தை
வாசங்களாய்
நிரப்பிக் கொண்டோம்
மொட்டுக்களில்....
மனிதனின்
புறக்கணிப்பு
தெரியும் வயது
போலும்
ஓணாவிடம்
மட்டுமே சலிக்காமல்
மணிக் கேட்டு
கொண்டோம்....
பல முகங்களில்
நிலைத்திருந்தாலும்
எல்லாருடைய
அப்பாவையும்
முருகப்பூவாகவே
அடையாளங்கண்டு
கொண்டோம்.....
திரி திரி
பந்தங்களில்
வெளிச்சங்களை
திரும்பிப் பார்க்கும்
போதெல்லாம்
‘கொட்டு’க்களையும்
சேர்ப்பித்துக்
கொண்டோம்....
கடந்து போயும்
இன்னும்
கடந்துக்
கொண்டிருக்கிறது
பால்யம்
புத்தக இடுக்கில்...
பூக்களில்...
மணி கேட்போரில்...
அப்பாவின் பெயரில்..
திரும்பிப் பார்க்கும்
ஒவ்வொரு
கணத்தில்........
பால்யத்தைப் பற்றிய பிரமாதமான கவிதை. நீங்கள் குறிப்பிட்ட திரி திரி பந்தம், குத்து குத்து சம்பளம், ஒரு குவளை தண்ணி ஊத்தி, ஓணா ஓணா மணி எத்தனை... இப்படி எத்தனை எத்தனை விளையாட்டுகள்... இன்றைய பல குழந்தைகளுக்கு இதெல்லாம் வந்து சேராமலே போய்விட்டதை எண்ணி வேதனையாகத்தான் உள்ளது. பால்யத்தைப் பற்றிய உங்களது நினைவுகூர்தல் மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்த்து...
ReplyDeleteமீண்டும் என் குழந்தை பருவத்தை நினைவு கூற வைத்துவிட்டீர்.. நன்றி
ReplyDelete