
சில
இறுக்கங்களில்
தளர்க்க நினைத்தும்
அகப்படாத
என் மனப்
போராட்டங்களை
அடக்க முயற்சித்தேன்
தேநீர் விழுங்கலில்...
ஜன நாயகம்
என்ற பல நாடகங்களில்
இதுவும் ஒரு
போர்வைப் போலும்.....
போர்த்திக் கொள்ளாமலே
வியர்த்தது...
ஆரம்பமே
தொழில் தொடங்கி
கல்வியில் நிற்க..
உன் முதுகலையும்
என் இளங்கலையும்
முரண்பாடுகளில்
பிடித்தது பிடிக்காதது
அரசியல்
மார்க்கீசம்
கடவுள் என
உன் கொள்கைப் பரப்புகளை
மலையாய்
பேசி முடித்து
துளியாய் என்னையும்
கேட்டு வைத்தாய்.....
சகஜமாய்
பேச முற்பட்டு
முடியாத பட்சத்தில்
சிறு புன்னகைக்குள்
ஒழிந்து கொண்டேன்.....
தேநீர் மிச்சங்களில்
நம் விடைப் பெறுதலும்
சில வாரங்களில்
‘ பெண் பிடிக்கவில்லை ’
என்ற உன் தகவலும்.....
மீண்டுமொரு
ஜனநாயகம்
மற்றொரு கோப்பைத்
தேநீரோடு.....
- தினேசுவரி
This comment has been removed by the author.
ReplyDeleteஅழகான தமிழில் கசப்பான உண்மை!
ReplyDeleteபெண் பார்க்கும் படலங்களில் பெண்ணை பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்ற ஆணாதிக்க அரசியலை, ஜனனாயகம் என்று நீங்கள் கூறும் அங்கதம் நன்றாய் வந்திருக்கிறது, தினேஷ்வரி. உங்கள் அகப்பக்கத்தைக் கவிதையால் நிரப்புங்கள் நான் வாசிக்க விரும்புகிறேன்.
ReplyDelete